'பொன்னியின் செல்வன் பாதையில் இரண்டாம் நாளின் தொடர்ச்சி. முந்தைய பதிவை இங்கே படிக்கவும். கடம்பூர் மாளிகை சென்றதை கூறும் முன் அவ்விடத்தின் சிறப்பை எடுத்துரைத்தால் நல்லது என்பதால்... வீரநாராயண ஏரி (எ) வீராணம் ஏரியில் ஆடி பதினெட்டாம் பெருக்கை மக்கள் விமர்சையாய் கொண்டாடுவதையும் அதன் பிறகு வீரநாராயண பெருமாள் கோவில் (எ) காட்டுமன்னார் கோவிலில் 'ஆழ்வார்க்கடியான் நம்பியை' சந்தித்தான் வந்தியத்தேவன். பராந்தக சோழனின் மகனும் பட்டது இளவரசனும் சோழ வடபுல சேனையின் தலைவனுமான ராஜாதித்ய சோழன் இங்கே முகாமிட்டபொழுது வீரர்கள் ஓய்வெடுத்து காலம் கடத்துவதைவிட மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கோடு கட்டப்பட்டதே இந்த ஏரி. பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனின் பயணமும் இந்த இடத்திலிருந்தே தொடங்கியது. ஏரி கட்டிமுடிக்கப்பட்ட பின் நீரின் தெய்வமான பெருமாளுக்கு கோவில் எழுப்பியிருந்தான் இளவரசன். ராஜாதித்ய சோழன் தக்கோலம் போரில் வீர மரணம் எய்தினான். ஆகையால் யானைமேல் துஞ்சிய தேவன் எனும் பட்டம் பெற்றான் என்பது கொசுறு தகவல். காஞ்சியிலிருந்து ஆதித்த கரிகாலனின் ஓலையை தஞ்சைக்கு எடுத்துப்போகும் வழ