Skip to main content

Posts

Showing posts from April, 2023

Book Review - வேலையற்றவனின் டைரி

வேலையற்றவனின் டைரி  ஆசிரியர்: ஜி.ஆர்.சுரேந்திரநாத்  வெளியீடு: இந்து தமிழ் திசை  நம்மை சுற்றி பல நகைச்சுவைகள், கேளிக்கையான சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. காலஓட்டத்தில் பெரும்பாலானோர் அதை கவனிப்பதில்லை அல்லது அசட்டையாய் இருந்துவிடுகின்றோம். ஆனால், அவை அனைத்தையும் - பள்ளிக்கூடம் போன நாள் தொடங்கி சினிமா பார்த்தது; பஜ்ஜி சாப்பிட்டது; நண்பர்களுடன் கதை அடித்தது; காதல் வயப்பட்டது - ஓரிரு பக்கங்களில் படிக்கநேர்த்தால்? அதுவே இப்புத்தகம்!!  இக்கட்டுரை இந்து தமிழின் இணைப்பிதழில் தொடராக (வரம் ஒரு அத்தியாயம்) வெளிவந்த சமயத்தில், தற்செயலாக ஒரு நாள் படிக்க நேர்ந்தது. அதன்பின் வாரம் தவறாமல் படிக்க தொடங்கினேன். படிப்பதில் பலவகை genre உள்ளது, அதில் இப்புத்தகம் / கட்டுரை தொகுப்பு lite reading material. பெரியளவில் மூளைக்கு வேலை கொடுக்காமல் பொழுதுபோக படிக்கவேண்டிய கட்டுரை தொகுப்பு.  மத்திம வயதில் இருக்கும் பெரும்பாலானோருக்கு பகிர்ந்துகொள்ள பழங்கதைகள் இருக்கும். இளம்வயது விளையாட்டுகள், பதின்ம வயது காதல், நண்பர்களுடனான பொழுதுகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிப்பட்ட சிறுசிறு நினைவுகளை கி