விவேகானந்தர் காலிஃபோர்னியாவில் பேசியது பிரசித்தி பெற்ற உரை. 'சகோதர, சகோதரிகளே!' என்று அவர் பேசியது இன்றும் பலரால் நினைவுகூரப்படுகிறது. அந்த நிகழ்வை போற்றும் வகையில் அந்த பயணத்தின் பின்னணியை கூறும் விதமாக எடுக்கப்பட்டது இந்த நாடகம்.
பொதுவாக என்னுடைய பள்ளியில் 10th & +2 மாணவர்களை நாடகங்களில் நடிக்கவைக்க மாட்டார்கள், காரணம் பொதுத்தேர்வு. ஆனால், 2013 ஆண்டு நான் 12ம் வகுப்பு மாணவன், அதுவும் பொதுத்தேர்வுக்கு 2 மாதங்களே இருந்த காலகட்டம். அவ்வாண்டு விவேகானந்தரின் 150ம் ஆண்டு கொண்டாட்டம். இந்த நாடகத்தில் நடிக்க வேண்டும் என பலரை தேடிய பிறகு என்னை தேர்தெடுத்தனர் தமிழ்த்துறை ஆசிரியர்கள் திரு.முத்து மற்றும் திரு.குமரன். அதற்காக பள்ளி நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. என்னுடைய 12ம் வகுப்பு தேர்வு முடிவுக்கு அவர்களே பொறுப்பென கையெழுத்திட்டனர்.
இவை அனைத்திற்கும் காரணம் ஒன்றே, அது 150ம் ஆண்டு கொண்டாட்டம் என்பதால் விவேகானந்தர் என்ற நபரை பார்வையாளர்களின் கண்முன்னே நிறுத்தவேண்டும். நான் அந்த பாத்திரத்திற்கு நியாயம் செய்தேனா என்று எனக்கு தெரியாது ஆனால், நிச்சயம் பேரை கெடுக்கவில்லை என்று நம்புகிறேன்.
Swami Vivekanandha' speech in California is a famous one. The oration starts with the prefix 'Dear Brothers and Sisters..' is still remembered by many. This school drama was taken on the 150th Birth Anniversary of Vivekanandha in 2013, which narrates about the background of the famous speech.
Usually, school management won't allow 10th & 12th students to perform in the cultural events, due to Board Exams. But, after searching many faces Mr. Muthu & Mr.Kumaran, both from Dept. of Tamil, approached me for the role. They had given an undertaking form to the management for the special permission for me to act in the role, which stated that they both will be the responsible persons for my exam performance.
All these high dramas before the event was to show the audience a face, that they should accept him as Vivekanandha. I don't know whether I had done the justice to the role, but for sure I believe that I haven't done injustice to it!
P.S.: I have scored good marks in the board exams :)
Dinesh
05.07.2020
Comments
Post a Comment