என் பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! உங்களின் வாழ்த்தும் ஊக்கமும் என்னை அடுத்த நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.
பிறந்த நாளை கொண்டாடும் பழக்கத்தை விட்டொழித்து ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆகப்போகிறது. பிறந்த நாள் என்று எந்த விதமான ஆடம்பரங்களிலோ, கொண்டாட்டங்களிலோ ஈடுபடுவதில்லை. அதிகபட்சம் பெற்றோரின் ஆசிர்வாதம், ஆலய தரிசனம் உடன் மதியம் பிரியாணியும் பாயாசமும் இதுவே என்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டம்.
ஆகஸ்ட் 15 என்பது அனைவரின் மனதிலும் எளிதில் நிற்கக்கூடிய நாள். அதனாலோ என்னவோ என்னுடன் பழகிய பெரும்பகுதியினர் என்னுடைய ஜனன நாளை சரியாய் நினைவில் வைத்து வாழ்த்து சொல்லுவர். மற்றைய வருடங்களில் இதை ஒரு வாழ்த்தாக மட்டுமே எடுத்துக்கொண்டு கடந்துவிடுவேன். ஆனால், இந்த வருடம் அப்படியாகப்பட்டதில்லை! காரணம், இவைகள்தான்:
1. கொரோனா காலத்தில் எதிர்மறை செய்திகளையே கேட்டு பழகி, நேர்மறையான வாழ்த்தை கேட்பது ஒருவித ஆக்க ஊட்டமே!
2. 25 என்ற ஒரு மயில்கல்லை வாழ்வில் எட்டி உள்ளேன்.
3. பெரும்பாலானோரின் வாழ்த்தில் நான் கண்டது, எனக்கேற்ற வாழ்வை சீக்கிரம் சென்றடைய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
இரண்டும் மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்று நான் நம்புகிறேன்! காரணம் ஒரு மயில்கல்லை எட்டிய பிறகும் எனக்கான வாழ்வை துரத்திக்கொண்டுள்ளேன் என்பது ஒருவகை தொய்வாகவே நான் பார்க்கிறேன். இருப்பினும், அப்துல் கலாமின் அக்னிச்சிறகிலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து காட்ட விழைகிறேன்:
இதிலிருந்து ஒரு விடையம் தெளிவாகலாம், நம் விருப்பம் வேறு நமக்காக எழுதப்பட்ட கடமை வேறு. கலாம், விமானப்படையில் ஒரு விமானியாகவே விருப்பம் கொண்டார். அது அவருக்கு கைகூடவில்லை. ஆனால், முப்படைக்கும் தளபதியாகும் வாய்ப்புக்காகத்தான் அவரது கனவு/விருப்பம் தடைபட்டது.
அதைப்போலவேதான் நமது வாழ்வும். நாம் ஒன்று நினைக்கலாம் ஆனால் விதி என்னவென்பதை யார் அறிவார்? எனது வாழ்வை நான் இன்னும் தேடிக்கொண்டுதான் உள்ளேன். உங்களின் உதவியுடனும் வழிக்காட்டுதலின்படியும் எனது வாழ்வை நிச்சயம் அடைவேன் என்பது மட்டும் திண்ணம்!!
மீண்டும் ஒருமுறை உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி! நன்றி!
***
My heartfelt thanks to all the well-wishers who greeted me on my Birthday! I have no doubt that your greetings and encouragement will take me to the next level.
It has been almost 10 years since I got rid of the habit of celebrating birthdays. Birthdays do not involve any extravagance or celebration. At max Parental Blessings, Afternoon Biryani and Payasam with Temple Darshan, this is my birthday celebration in the last decade!
August 15 is a day that can easily stand out in everyone’s mind. That's why most people who are used to me, remember and wish me a 'Happy Birthday'. In other years I will take this as a greeting and pass on. But, this year has never been like that! The reason(s) are as follows:
1. Getting used to hearing negative news during the Corona period and listening to positive greetings is a kind of creative feed!
2. I have reached the milestone of 25.
3. What I saw in most people's greetings was that I had to reach the life that suits me as soon as possible.
I believe the two and the three are interrelated! Because I see it as a kind of fallacy that I am chasing life for myself even after reaching a milestone. However, I would like to quote a small passage from Abdul Kalam's Wing of fire:
One thing may become clear from this, our will is different from the work which assigned for us. Kalam wanted to be a pilot in the Air Force. It didn’t help him. However, his dream / desire was thwarted only by the opportunity to become the commander of the Tri-forces.
That is how our lives are. We may think so but who knows what the fate is? I'm still looking for my life. With your help and guidance I'll surely achieve it!!
Thanks for your greetings once again!
Dinesh
15.08.2020
Comments
Post a Comment