Skip to main content

Posts

Showing posts from 2021

Book Review - Checkmate: How BJP won and lost Maharashtra

Checkmate: How BJP won and lost Maharashtra Author: Sudhir Suryawanshi Publication: Penguin Viking   Nov-2019 assembly election results was not a normal one for Maharashtra. The state has witnessed political twists and turns along with the surprising post-poll alliance. If anyone had said before the election that a Right-wing, radical party like Shiva Sena (SS) would go in alliance with Centrist-Left Indian National Congress everyone would have laughed. Because, SS & BJP shared almost same ideology and traditional they are partners for about three decades.  But, things changed when election results were announced on Oct-24, 2019. Pre-poll surveys said that in the house of 288 seats BJP-SS combo would bag more than 200 seas and election is just a formality. BJP on its own is expected to cross 130 (Majority mark is 145). On the other hand the party which had ruled the state for long (INC) along with its ally Nationalist Congress Party (NCP) was expected to touch only around 50.  Th

பொன்னியின் செல்வன் பாதையிலே - 3

  'பொன்னியின் செல்வன் பாதையில் இரண்டாம் நாளின் தொடர்ச்சி.  முந்தைய பதிவை இங்கே படிக்கவும்.   கடம்பூர் மாளிகை சென்றதை கூறும் முன் அவ்விடத்தின் சிறப்பை எடுத்துரைத்தால் நல்லது என்பதால்... வீரநாராயண ஏரி (எ) வீராணம் ஏரியில் ஆடி பதினெட்டாம் பெருக்கை மக்கள் விமர்சையாய் கொண்டாடுவதையும் அதன் பிறகு வீரநாராயண பெருமாள் கோவில் (எ) காட்டுமன்னார் கோவிலில் 'ஆழ்வார்க்கடியான் நம்பியை' சந்தித்தான் வந்தியத்தேவன். பராந்தக சோழனின் மகனும் பட்டது இளவரசனும் சோழ வடபுல சேனையின் தலைவனுமான  ராஜாதித்ய சோழன்  இங்கே முகாமிட்டபொழுது வீரர்கள் ஓய்வெடுத்து காலம் கடத்துவதைவிட மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கோடு கட்டப்பட்டதே இந்த ஏரி. பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனின் பயணமும் இந்த இடத்திலிருந்தே தொடங்கியது. ஏரி கட்டிமுடிக்கப்பட்ட பின் நீரின் தெய்வமான பெருமாளுக்கு கோவில் எழுப்பியிருந்தான் இளவரசன். ராஜாதித்ய சோழன் தக்கோலம் போரில் வீர மரணம் எய்தினான். ஆகையால்  யானைமேல் துஞ்சிய தேவன்  எனும் பட்டம் பெற்றான் என்பது கொசுறு தகவல். காஞ்சியிலிருந்து ஆதித்த கரிகாலனின் ஓலையை தஞ்சைக்கு எடுத்துப்போகும் வழ

பொன்னியின் செல்வன் பாதையிலே - 2

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' பாதையில் இரண்டாம் நாள். முந்தைய பதிவை இங்கே படிக்கவும் நாள் -2 இன்று முழுவதும் சோழர்கள் தங்களின் கலை என்னும் அஸ்திரம் கொண்டு மூர்ச்சை அடைய செய்யப்போகிறார்கள் என்பதால் கதிரவன் தனது கதிர்களை பாய்ச்சும் முன்னே தாக்குதலை எதிர்கொள்ள தயாராகினேன்.  பொன்னியின் செல்வன் கதையில் மிக முக்கியமான கதாபாத்திரமான 'சேத்தன் அமுதனின்' தோட்டத்தை தான் முதலில் பார்க்கப்போனோம். அதை தேடி வெகுதூரம் அழைய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காரணம் நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு மிக அருகே அந்த வரலாற்று இடம் அமைந்திருந்தது.  சேத்தன் அமுதன் இந்த இடத்தில் தான், தனது தாயுடன் பூந்தோட்டம் அமைத்து சிவனுக்கு கைங்கரியம் செய்துவந்தான். வந்தியத்தேவன் சேத்தனை தஞ்சை அரண்மனை வாயிலில் செம்படை வீரர்கள் அணிவகுப்பின்பொழுது சந்தித்தான். (இந்த செம்படையை மையமாக வைத்தே 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவன் செம்படை சோழர்களுக்கு உதவுவதை போல் கதை வைத்தார்). இந்த சேத்தன் அமுதன் தான் பின்னாளில் உத்தம (எ) மதுராந்தக சோழனாக அரியணையில் அமர்ந்தான்.  அத்தோட்டம் தற்பொழுது சிவன் திருக்கோவில

பொன்னியின் செல்வன் பாதையிலே - 1

கல்கியின் எழுத்துக்களில் ' பொன்னியின் செல்வன் ' படித்த அனைவரது கனவும், நிச்சயம் ஒரு முறையேனும் வந்தியத்தேவனின் பாதையில் நாமும் பயணிக்க வேண்டும் என்பதே. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. எனக்குள்ளும், நெடு நாளாய் கனன்று கொண்டிருந்த ஆசை சமீபத்தில் தான் நிறைவேறியது. நாங்கள் மூவர் ஒரு குழுவாக கடந்த வருட இறுதியில் மேற்கொண்ட பயணம் இது. முழுமையான பாதையை தொட்டோமா என்றால், இல்லை. குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய மிக சில இடங்கள், ஆனால் முக்கியமான இடங்கள்.  இது முழுக்க முழுக்க பொன்னியின் செல்வன் பயணம் தானா என்றால் அதற்கும் பதில் இல்லைதான். வேறு சில இடங்களையும் பார்த்தோம். அதை பற்றியும் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.  இந்த பயணம் மொத்தம் மூன்று நாட்கள் - மூன்று பகல், இரண்டு இரவு.  பொன்னியின் செல்வன் கதை சுருக்கம்: தந்தை சுந்தர சோழர் தஞ்சை அரண்மனை யில் உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்து வடக்கே காஞ்சியில் பகைவர் படை எடுக்காமல் காவல் காத்து வரும் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் தான் கட்டிய பொன் மாளிகையில் தம் பெற்றோரை அழைத்து தங்க சொல்வதற்கு தம் சிநேகிதன் வ