நீண்ட நாட்களாக என்னுடைய எண்ணங்களை, அனுபவங்களை யாரிடமேனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்துவந்தது. பல நண்பர்கள் எனக்கு உண்டென்றாலும் புத்தகங்களையே எனது பிரதான நண்பன் என்பேன். அதுபோல, என் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள சுற்றம் இருக்கும் போதிலும், எழுத்தையே அதற்கான பிரதான வழிமுறை என்று நம்புகிறேன்.
இந்த முயற்சியில் எனக்கு ஏற்படும் அனுபவங்களையும், பல்சுவை உணர்வுகளையும் எந்த ஒளிவு மறைவும் இன்றி உங்களுடன் பகிர்வேன் என நம்புகிறேன்.
இந்த blog இருமொழி கொண்டதாக இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் எடுத்து செல்ல முடிவெடுத்துள்ளேன். இருமொழி கொள்கையே நம்மை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை காத்து வந்திருக்கிறது. ஆகையால், முடிந்தவரை தமிழில் எழுதுவதை ஆங்கிலத்திலும் பதிய முற்படுவேன்.
இந்த பயணத்தில் உங்களுடன் அரசியல், விளையாட்டு, சமூகம், அறிவியல், தொழில், புத்தக அறிமுகம், சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு ஆகியவற்றை பகிர இருக்கிறேன். இந்த பயணம், நிச்சயம் நம் இருவருக்கும் பயன்படும் வகையில் அமையும். தொழில் மேலாண்மையில் பயன்படுத்தப்படும் Win -Win Strategy என்ற சொற்றொடர் இதற்கு பொருத்தமாக இருக்கும்.
வாருங்கள் சேர்த்து நடப்போம், வரலாற்றை குறுக்கு வெட்டு பருந்து பார்வையில் காண்போம்.
~தினேஷ்
25.04.2020
திருவள்ளுவர் ஆண்டு 2051 சித்திரை 12
25.04.2020
திருவள்ளுவர் ஆண்டு 2051 சித்திரை 12
PC: For the creator
Nice for ur try. Good keep it up
ReplyDeleteTq
Delete