எ ன் பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! உங்களின் வாழ்த்தும் ஊக்கமும் என்னை அடுத்த நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. பிறந்த நாளை கொண்டாடும் பழக்கத்தை விட்டொழித்து ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆகப்போகிறது. பிறந்த நாள் என்று எந்த விதமான ஆடம்பரங்களிலோ, கொண்டாட்டங்களிலோ ஈடுபடுவதில்லை. அதிகபட்சம் பெற்றோரின் ஆசிர்வாதம், ஆலய தரிசனம் உடன் மதியம் பிரியாணியும் பாயாசமும் இதுவே என்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டம். ஆகஸ்ட் 15 என்பது அனைவரின் மனதிலும் எளிதில் நிற்கக்கூடிய நாள். அதனாலோ என்னவோ என்னுடன் பழகிய பெரும்பகுதியினர் என்னுடைய ஜனன நாளை சரியாய் நினைவில் வைத்து வாழ்த்து சொல்லுவர். மற்றைய வருடங்களில் இதை ஒரு வாழ்த்தாக மட்டுமே எடுத்துக்கொண்டு கடந்துவிடுவேன். ஆனால், இந்த வருடம் அப்படியாகப்பட்டதில்லை! காரணம், இவைகள்தான்: 1. கொரோனா காலத்தில் எதிர்மறை செய்திகளையே கேட்டு பழகி, நேர்மறையான வாழ்த்தை கேட்பது ஒருவித ஆக்க ஊட்டமே! 2. 25 என்ற ஒரு மயில்கல்லை வாழ்வில் எட்டி உள்ளேன். 3. பெரும்பாலானோரின் வாழ்த்தில் நான் கண்டத...